தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.11

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே : ரைம்ஸ்


உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே என்று ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் சொத்துக்களை லிபிய அரசின் உயர்மட்ட ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போதய கணக்குகளின்படி அவருடைய சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ளது. பெருந்தொகையான தங்கம், பாரிய அறைகளில் குவிந்துள்ள தாள் நாணயங்கள், உலகத்தில் உள்ள பலதரப்பட்ட வங்கிகளிலும் பணத்தை முதலீடு செய்துள்ள தொகை, ஒவ்வொரு நாட்டிலும் பல மில்லியன்களில் வாங்கப்பட்டுள்ள அவருடைய மாளிககைள், அவர் முதலிட்ட பணம் என்று இந்தத் தொகை நீண்டு செல்கிறது. எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சர்வாதிகாரி கொஸ்னி முபாரக்கிடம் இருந்ததைவிட அதிக தொகையை இவர் வைத்திருந்துள்ளார். டேனிஸ் குறோணர்களில் கணக்கிட்டால் இவருடைய தற்போதைய சொத்துக்களின் பெறுமதி 1068 பில்லியன் குறோணர்களாகும். சுவீடிஸ் வங்கியில் மட்டும் 10 பில்லியன் டாலர்களை வைத்துள்ளார்.
2011 ம் ஆண்டு உலகத்தின் முதலாவது பணக்காரர் மெக்சிக்கரான காளோஸ் சிலிம் என்று கூறப்பட்டது. இவருடைய சொத்து 74 பில்லியன் டாலர்களாகும். மூன்றாவது இடத்தில் உள்ள மைக்கிரோ சொப்ற் பில் கேட்ஸ் வெறும் 35 பில்லியன் டாலர்களுக்கே அதிபதி. ஆனால் கடாபி இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட உலகின் முதலாவது கோடீஸ்வரன் என்றும் ரைம்ஸ் கூறுகிறது.
வெறும் 24 பில்லியன் குறோணரை மீதம் பிடிக்கத் தெரியாது தடுமாறி நாலு வருடங்கள் போராட வேண்டிய நிலையில் உள்ள டென்மார்க்கை ஒரே நொடியில் தூக்கிவிடுமளவு பணம் இவரிடம் குவிந்துள்ளது. கடாபிக்கும், கொஸ்னி முபாரக்கிற்கும் எதிராக போராட்டம் வெடித்தது எதற்காக என்பது முக்கிய கேள்வியாகும். அவர்களிடம் சேர்ந்திருந்த அளவுக்கு மீறிய செல்வத்தை சூறையாடும் பருவம் வந்துவிட்ட காரணத்தாலேயே அந்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டது என்ற எண்ணவும் முடியும். எப்போதுமே பணமும், நகையும் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் போராட்ட வீரனுக்கும் மனம் மாறும், அவனுடைய எதிரிகள் அவனுடைய செல்வத்தை சூறையாட போரை தொடுப்பார்கள். பணம் குவிந்துள்ள இடத்தை நோக்கி போர் தொடுப்பது இன்றைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவசியமாகும். நேட்டோ வீசிய குண்டுகளுக்கான கொடுப்பனவு கடாபியின் நிதியில் இருப்பதை சிறீமான் பொதுஜனம் இத்தருணம் அறிவது நலமே. மேலும் சவுதி மன்னர் குடும்பமும் இத்தகைய ஆபத்தை சந்திக்க வழியிருக்கிறது. சிறீலங்கா அரசு தனது வறுமையைத் தீர்க்கவே யூலைக் கலவரத்தை நடாத்தியதும், வன்னி மீது போர் தொடுத்ததும் கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: