ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் நேற்று காலை நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் அமெரிக்க படையினர் 13 உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடைய நகரமாக கருதப்படும் காபூலில் ஒரு கார் நிறைய குண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்து இத்தாக்குதலை தாலிபான்கள்
நடத்தியுள்ளனர். அமெரிக்க இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற பேருந்தைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தபட்டதாகவும், இதில் அமெரிக்க படையினர் 13 பேரும், ஆப்கானியர்கள் 3 பேரும், ஆப்கான் காவல் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
காபூல் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள தாருல்லாமான் என்ற இடத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதலை நடத்தியது தாங்களே என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆப்கானின் தென் பகுதியில் ஆப்கான் காவலர் உடையில் வந்த போராளி நடத்திய தாக்குதலில் ஆஸ்ட்ரேயில இராணுவத்தினர் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களோடு தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக