ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் தெரிவு செய்யப்படுவதற்கு,
இந்தியா பாரிய பங்களிப்பு செலுத்தியதாக பாகிஸ்தான் தூதுவர் அப்துல்லா ஹுஸைன் ஹரூன் நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை நண்பராக பார்ப்பதில் பல நாடுகள் தயக்கம் தெரிவித்த நிலையில், நாம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு இந்தியா எமக்கு ஆதரவு
தெரிவித்தது. சிலநாடுகள், நாம் ஐ.நாவில் அங்கத்துவம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதனால் நாம் ஏமாற்றமடையவில்லை. இன்றைய உலகில் பாகிஸ்தானிடமிருந்து நேர்மறையான பலாபலனை உலகம் எதிர்பார்த்திருக்கிறது என்றே என்னால் கூற முடியும் என அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானை நண்பராக பார்ப்பதில் பல நாடுகள் தயக்கம் தெரிவித்த நிலையில், நாம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு இந்தியா எமக்கு ஆதரவு
ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினரகாக அடுத்து வரும் இரு ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அங்கத்துவம் பெற்றுள்ளது. கிர்கிஸ்தானுடன் போட்டியை எதிர்நோக்கிய பாகிஸ்தான் இறுதியில் 129/193 எனும் வாக்குகள் வீதத்தில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.
இந்த இடத்தை பிடித்துக்கொள்வதற்காக கடந்த ஆறு மாதம் கடுமையாக உழைத்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவும், பாகிஸ்தானும், ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரே நேரத்தில், மூன்று தடவை அங்கத்துவம் வகித்திருந்தன. 1968, 1977,1984ம் ஆண்டுகளில் இவ்வாறு சூழ்நிலை அமைந்தது.
எனினும் இம்முறை இந்தியாவின் பதவிக்காலம் முடிவடைந்து மேலும் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் அங்கத்துவத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக