தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களே மேயர் ஆகி இருக்கிறார்கள். அனைத்து மாநகராட்சி களிலும் அ.தி.மு.க.வே பெரும் பான்மை பெற்றுள்ளது. எனவே, 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வினரே துணை மேயர் ஆக முடியும் என்ற நிலை உருவானது.
மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். திருச்சி துணை மேயர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக எம். ஆசிக்மீரா அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 16 வார்டுகளை பிடித்துள்ளது. ம.தி.மு. க.வினர் 3 பேரும், காங்கிரஸ், தே.மு.தி.க. தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டிலும் கவுன் சிலராகி உள்ளனர்.
27-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் ஆசிக்மீரா துணை மேயர் வேட்பாளராகி இருக்கிறார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிக்மீரா பிளஸ்-2 படித்து இருக்கிறார். வயது 30. திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஜாகிதா பேகம். ஆயிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து ஆசிக் மீரா கூறியதாவது,என் தந்தை விட்டுச் சென்ற பணியை தொடருவேன் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக