தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.11

துருக்கியின் வான் நகரை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் : உணர்ச்சிகரமான படங்கள்


கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியின், கிழக்கு நகரான, 'வான்' இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுமார் 100 மணித்தியாலங்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த 18 வயது இளைஞன் ஒருவன்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2 வாரங்களே ஆன கைக்குழந்தை
மற்றும், அவரது தாய், பாட்டி ஆகியோரும் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் உலக சனத்தொகை 7 மில்லியனை எட்டப்போகும் அக்.31ம் திகதியை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கும் நிலையில் மறுபக்கம் கடந்த வாரம் துருக்கியில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் இன்னமும் யாரும் உயிருடன் மீட்கப்பட மாட்டார்களா என ஏக்கம் அதிகரித்துள்ளது.

வார்த்தைகளால் விபரிக்க முடியாத, துருக்கி நிலநடுக்கத்தின் சோகம் படங்களாக இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
100 மணித்தியாலங்களுக்கு பிறகு உயிருடன் இளைஞன் மீட்கப்பட்ட வீடியோ
நன்றி : AP, Getty Images, Boston

0 கருத்துகள்: