தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.11

போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் கடாபியின் மகனுடன் தொடர்பு


தற்போது நைஜீரியா வழியாக கூலிப்படைகளின் உதவியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் உடனடியாக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சரணடைய வேண்டும் என்று ஐசீசீ கேட்டுள்ளது. இடைத்தரகர் மூலமாக இவருடன் தொடர்பு கொண்ட போர்க்குற்ற நீதி விசாரணை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதையும், சரணடைய வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை தலை மறைவாக இருக்கும் கடாபியின்
மகன் தான் போர்க்குற்றம் சுமத்தும் தவறுகள் எதையும் புரியவில்லை என்று அறிவித்துள்ளார். இருப்பினும் தனது உயிருக்கு பாதுகாப்பான இடம் சர்வதேச நீதிமன்ற சிறைக்கொட்டடியே என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாக லிபிய போராளிகள் குழு தெரிவிக்கிறது. கடாபியின் மகன் ஐ.சீ.சீயிடம் அகப்பட்டால் அவர் மீதான குற்றம் நிறுவப்படக்கூடிய ஆதாரங்கள் ஏராளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கடாபியின் 42 வருட சர்வாதிகார ஆட்சியில் நாட்டின் ஒட்டு மொத்த வளங்களையும் சுரண்டி, இவர்கள் நடாத்திய நயவஞ்சக படுகொலை ஆட்சிக்கான பரிசை பெற வாய்ப்புண்டு. அதேவேளை லிபியா சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் தன்னை பதிவு செய்துள்ளதா என்பது முக்கிய கேள்வி. ஒரு சர்வாதிகார நாடு தன்னை அவ்வாறு பதிவு செய்து கொள்ள வாய்ப்பில்லை. மேலும் போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் சிறீலங்கா மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றையும் இந்த விவகாரம் அடியோடு உடைத்தெறிந்துள்ளது. சிறீலங்கா போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றால் ஐ.சீ.சீயின் நேரடியான பிடிவிறாந்தை பெற வேண்டி ஏற்படலாம். கடாபி மகனின் விவகாரம் சிறீலங்காவின் போர்க் குற்ற விவகாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

0 கருத்துகள்: