அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மாலை, ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலமொன்று
அறுந்து வீழ்ந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கேமங் மாவட்டத்தில் உள்ள செப்பா நகரையும், நியூசெப்பா
நகரையும் இணைக்கும் இந்த தொங்கு பாலத்தில், நேற்று அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் திண்டதால், பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் வீழ்ந்தது.மேலும் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கேமங் மாவட்டத்தில் உள்ள செப்பா நகரையும், நியூசெப்பா
ஆழமானதாலும், மிக வேகமாக ஆற்று நீர் சென்றதாலும் ஆற்றில் பலர் மூழ்க ஆரம்பித்தனர். உடனடியாக விஷயமறிந்து அக்கம்பக்கத்தவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 29 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இன்று காலைவரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆறு பெருக்கெடுத்து ஓட தொடங்கியிருப்பதால், ஆற்று நீரில் பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உணவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை பூச்சியை பிடிக்கவே குறித்த பாலத்தில் 70க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களும் பெரியர்களும் ஒன்று திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது
உணவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை பூச்சியை பிடிக்கவே குறித்த பாலத்தில் 70க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களும் பெரியர்களும் ஒன்று திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக