தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.11

இஸ்ரேல் மீண்டும் காஸா மீது குண்டு வீச்சு ஒன்பது பேர் மரணம்


பாலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுக்கள் ஒரு புறம் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தின் தனிநாட்டுக்கான அங்கீகாரப் பிரேரணை ஐ.நாவின் அங்கீகாரம் பெறும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான நிலையில் இஸ்ரேலிய விமானங்கள் காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள றபா நகரத்தில் குண்டு வீச்சு நடாத்தின. இந்தத் தாக்குதலில் ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய கடும் போக்கு ஜிகாத் அமைப்பினர் ஐந்து பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜிகாத் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மரணித்தாக காஸா செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன போராளிஅமைப்பான ஹமாஸ் அடக்கி வாசிக்க இப்போது ஜிகாத் மீது இஸ்ரேலின் பார்வை திரும்பியுள்ளது. நேற்று முன் தினம் காஸா வட்டகையில் இருந்து ஏவப்பட்ட எறிகணை இஸ்ரேலில் விழுந்து இஸ்ரேலியர் ஒருவர் மரணித்த பின்னர் இந்த முறுகல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய – பாலஸ்தீன பேச்சுக்களின் தொண்டைக் குழிக்குள் எங்கோ ஓரிடத்தில் முள்ளு கொழுவிவிட்டதையே இந்தத் தாக்குதலும், மோட்டார் எறிகணை வீச்சும் எடுத்துரைக்கிறது. ஐ.நா சபைக்க பாலஸ்தீனத்தின் நிரந்தர உறுப்புரிமைக்கான பிரேரணை வந்த பின்னர் முடிவெடுக்க 35 தினங்கள் ஆகும் என்று ஐ.நா அறிவித்தது தெரிந்ததே. இதற்குள் இரகசியமாக பேச்சுக்களை நடாத்தி எருசெலேம் விவகாரத்தை முடிக்க அதி உயர் மட்டத்தில் முயன்று வருகிறார்கள். பாலஸ்தீனரிடமிருந்து எருசெலேமை அதிகபட்சம் பறித்துவிட பேச்சுக்கள் தந்திரமாக முயல வாய்ப்புள்ளது. பேச்சுக்கள் முறிந்தால் மீண்டும் கச்சேரி ஆரம்பிக்கும் என்க..

0 கருத்துகள்: