இந்தியாவிலிருந்து காஷ்மீரை தனிநாடாக பிரித்து தெஹ்ரிக்-இ-இன்சாஃப் தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது
கட்சியினரிடையே இம்ரான் கான் கூறியதாவது, இந்தியா, காஷ்மீரிகளிடையே 7,00,000 துருப்புகளை வைத்துள்ளது. எந்த நாட்டின் பிரச்சினைகளையும் ராணுவத்தால் தீர்க்க முடியாது என இந்துஸ்தானுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றிபெற முடியவில்லை. அமெரிக்கர்களாலேயே வெற்றி பெற முடியாதபோது இந்தியாவால் எப்படி 7,00,000 துருப்புகளைக் கொண்டு வெற்றிபெற முடியும். அமெரிக்க ராணுவத்தைவிட இந்திய ராணுவம் சக்தி மிக்கது இல்லை என இம்ரான் கான் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக