தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.11.11

ஐ.நாவின் யுனெஸ்கோவில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்


ஐ.நாவின் கலை கலாச்சார நிதியமான யுனெஸ்கோவில், பாலஸ்தீனம் உறுப்பு நாடாக இணைந்து கொள்ள அனுமதி  கிடைத்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா  ஆகிய நாடுகளின் கடுமையானா எதிர்ப்புக்கு மத்தியில், மொத்தம் 173 நாடுகளில் 107
நாடுகள்பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் இதற்கான வாக்கெடுப்பில் வாக்களித்தன.
52 நாடுகள் இவ்வாக்கெடுப்பில்  கலந்துகொள்வதை தவிர்த்து கொண்டன.

ஐ.நா சபையில் பாலஸ்தீனம் நிரந்த அங்கத்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பை ஐ.நா பாதுகாப்பு சபை அடுத்த மாதம் நடத்தவுள்ள  நிலையில் யுனெஸ்கோவுக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பது பாலஸ்தீனத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஐ.நாவின் கிளை அமைப்பு ஒன்றினால் பாலஸ்தீனத்துக்கு உறுப்புரிமை அங்கீகாரம் கிடைத்துள்ளது இதுவே முதன் முறை ஆகும்.

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனம் கொண்டுவரும் அழுத்தங்களை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதற்கு இந்த அங்கீகாரம்  உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: