எங்கள் உள் நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள்
தலையிட்டால் மேற்காசியாவே பற்றி எரியும் என சிரியா நாட்டின் அதிபர் ஆசாத் எச்சரித்துள்ளார்.சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் ஐ பதவி விலக கோரி கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் இது வரை 3000
பேர் பலியாகியுள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரேபிய லீக் அமைப்பு ஆசாத்தை பதவி விலக கோரியுள்ள நிலையில்
எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் மேற்கு ஆசிய பிராந்தியத்தின் அச்சாக இருக்கும் சிரியாவுடன் மோதினால் அங்கு பூகம்பம் வெடிக்கும் என்றும், சிரியா லிபியா போன்று அல்லது ஏனைய நாடுகள் போல சிரியாவின் வரலாறு இல்லை என்றும் எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக