தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.11.11

ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டது-பிரஸ் கவுன்சில் தலைவர்


"குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும் தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ் கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான‌ கருத்தரங்கில் பேசியதாவது:"நண்பர்களே,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில்தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன்.

தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னுடைய பணியைச் சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளதுசானால் அந்தச் சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள் இந்தச் செயலை பொறுப்போடு செய்கின்றனவா?
இந்த கட்டுப்பாடுகள் ஊடக சுதந்திரத்தை பறிப்பது அல்ல. மாறாக ஜனநாயக கட்டமைப்பில் தவறு செய்யும் அனைவரும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காகும். ஊடகங்கள் மக்களுக்காக செயல்படவேண்டும். ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள் பெரும்பாலும் மக்கள் விரோதமாக மாறுகிறது.
இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தாலும் சில மணிநேரங்களிலேயே சேனல்கள் இந்திய முஜாஹிதீனோ, ஜெய்ஷே முஹம்மதோ, முஸ்லிம் பெயரிட்ட நபரோ குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக அனுப்பியதாக கூறப்படும் இ-மெயில்களையோ, எஸ்.எம்.எஸ் செய்திகளையோ கண்டுபிடிக்கின்றன. இதன் மூலமாக முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற தவறான பிரச்சாரம் நடத்தப்படுகிறது.இ-மெயில்கள் எவராலும் அனுப்ப முடியும்.இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

0 கருத்துகள்: