டென்மார்க்கில் உள்ள 19 – 26 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி போடுவதற்கு புதிய அரசு 150 மில்லியன் டேனிஸ் குறோணர்களை வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கவுள்ளது. 2012 – 2013 காலப்பகுதியில் இந்தத் தடுப்பூசியை மேற்கண்ட வயதினர் இலவசமாகப் போட்டுக்கொள்ள முடியும். முன்னர் 12 வயது சிறுமிகளுக்குப் போடப்பட்ட இந்தத் தடுப்பூசியை இப்போது வயது கூடிய பெண்களுக்கும் விஸ்த்தரித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள இப்பணியை டென்மார்க் புற்று நோய் தடுப்புச் சங்கம் வரவேற்றுள்ளது. இவ்விதம் இலவசமாக தடுப்பூசி போடும் உலகத்தின் முதல் நாடு டென்மார்க் என்பத குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவிலும் 26 வயது வரை பெண்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் டென்மார்க்கில் உள்ள இளைஞருக்கும் இத்தகைய தடுப்பூசி போட யோசிக்கப்பட்டுள்ளது ஆனால் இது ஐரோப்பாவில் இன்னமும் அமலுக்கு வரவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக