பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்புரிமை வழங்கலாம் என்று யுனெஸ்கோ நிறுவனம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்க யுனெஸ்கோவிற்கு வழங்கிய நிதியில் பெரும்பகுதியை உடனடியாக இடை நிறுத்தம் செய்தது. இப்படி தனது நலனுக்கு பாதகம் வந்தால் யுனெஸ்கோவை தண்டிப்பது
அமெரிக்காவின் இயல்பாக இருக்கிறது. இது இரண்டாவது தடவையாக யுனெஸ்கோவிற்கான தனது நிதியை நிறுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த ஆண்டு நவம்பர் அமெரிக்கா 60 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் ஆனால் அது வழங்கப்பட மாட்டாது என்று சற்று முன்னர் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ நிதியில் 22 வீதத்தை அமெரிக்கா வழங்குகிறது. யுனெஸ்கோவில் அமெரிக்கா, ஜேர்மனி, கனடா போன்ற 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, சீனா ரஸ்யா உட்பட 107 நாடுகள் வாக்களிப்பில் ஆதரித்து வாக்களித்தன. பாலஸ்தீன ஆதரித்து வாக்களித்தற்காக யுனெஸ்கோ ஆதரவு பெறும் வறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்க புறப்பட்டுள்ளது. அமெரிக்கா இதுபோன்ற மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வேலையை 2 வது உலக யுத்தத்தின் மார்ஷல் திட்ட காலத்திலிருந்தே அவ்வப்போது செய்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக