லிபியா நாட்டிற்கான தற்காலிக பிரதமரை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபிய போராளிகள் குழுவின் உயர்மட்ட ஆயமான ரி.என்.ஏ நடாத்திய வாக்கெடுப்பில் 51 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூவர் போட்டியிட்டனர் இவர்களில் லிபியாவின் பிரபல வர்த்தகரும் திரிப்போலி நகரத்தை சேர்ந்தவருமான Abdul Al – Reheem Al – Qeeb தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 26 வாக்குகள் கிடைத்துள்ளன. லிபிய போராளிகள் ஆயம் மொத்தம் நான்கு தேர்தல்களை வரும் எட்டு மாத காலத்திற்குள்
நடாத்த இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் அதிகாரம் ஜனநாயக முறைப்படி மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் லிபிய போராளிகள் நாட்டின் நிர்வாகம் ஸாரியார் சட்டங்களின்படியே நடைபெறுமென அறிவித்திருந்தனர். இதை மேலை நாடுகள் எதிர்த்திருந்தன. போராளிகள் குழு ஸாரியார் சட்டங்களே வேண்டுமென அறிவித்து ஒரு நாடகம் ஆடினால் அங்குள்ள தீவிர மதப்பற்றாளரின் ஆதரவைப் பெற முடியும். அதேவேளை மேலை நாடுகளும் அதை எதிர்ப்பது போல எதிர்த்து நாடகம் ஒன்றை ஆடி மேலை நாடுகளில் தங்கள் வீரப்பிரதாபங்களை காட்டும். இப்படி இரு தரப்பும் செயற்கையான நாடகங்களை ஆடி லிபிய மக்களின் தோள்களில் நுகத்தடி ஏற்றி முடிக்கும் என்பதை இந்த நிகழ்வுகளின் போக்கு காட்டுகின்றது. இதுவரை காலமும் பல்லக்கு தூக்கியவர்கள் பல்லக்கில் ஏற மக்கள் மந்தைகளாக மாற்றமின்றி இருக்கும் அதே வழமை இங்கும் நடைபெற வாய்ப்புள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக