டேனிஸ் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கான் போர்க் கைதிகள் ஆப்கான் பாதுகாப்பு படைகளிடமே ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆப்கானில் நிலை கொண்டுள்ள டேனிஸ் படைகள் அங்குள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்து அந்த நாட்டு பாதுகாப்பு படையினரிடையே ஒப்படைத்து வருகிறார்கள் என்றார். இப்படிச் செய்வதோடு நில்லாமல் அங்கு மனித உரிமைகள் பேணப்படுகிறதா என்பதையும்
தாம் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால் ஆப்கானில் கைதாகும் சந்தேக நபர்களை எக்காரணம் கொண்டும் ஆப்கான் பாதுகாப்பு பிரிவினரிடம் வழங்க முடியாது என்று நோர்வே அறிவித்துள்ளது. ஆப்கான் அரச படையினரால் மனித உரிமைகள் மீறப்படுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. நோர்வேயின் இக்கருத்தை டேனிஸ் படைத்துறை அமைச்சர் அடியோடு மறுத்துள்ளார். மனித உரிமையென்றால் கிலோ என்ன விலையென கேட்கும் ஒரு நாட்டில் மனித உரிமைகள் பேணப்படுவதை சரியாக கண்காணிக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாகும். நோர்வேயின் சிறந்த முடிவை டென்மார்க் அமைச்சர் ஏற்கவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக