சிரியாவில் சர்வாதிகாரி பஸருல்ஆஸாத்தின் படுகொலைப் படைகள் இதுவரை 3000 பொது மக்களை சுட்டுக் கொன்றுவிட்டன. வேறு வழியற்ற நிலையில் இப்போது குடும்ப சர்வாதிகாரியின் படைகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 சிரியப்படைகள் படுகொலை செய்யப்பட்டனர், 53 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு சிரியாவின் போராட்டப்பாதையில்
பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. சிரிய இராணுவத்தில் இருந்து பலர் விலகிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் நடாத்திய தாக்குதலே படைகள் மரணிக்க காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் படையில் ஏற்பட்ட பிளவால் எத்தனை பேர் எதிரணியில் சேர்ந்தார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. தனக்கு ஆதரவற்ற படைகளை களையெடுப்பதில் ஆஸாட் முனைப்பாக இறங்கியிருந்த வேளை இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இது இவ்விதமிருக்க இன்று பிரிட்டன் பத்திரிகையான சன்டே ரைம்சிற்கு சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் வழங்கிய செவ்வியில் சிரிய மண்ணிலும் பூகம்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை முறிக்க மேலை நாடுகள் திட்டம் தீட்டிவிட்டன என்று கூறினார். ஆப்கானிஸ்தான் போல மேலும் பத்து குழப்பகர நாடுகளை ஏற்படுத்த மேலை நாடுகள் தீர்மானித்துவிட்டன. அதில் அடுத்த நாடகத்தை அவை சிரியாவில் தொடங்கிவிட்டன. நேற்று நடைபெற்றுள்ள படு கொலைகள் சிரிய மண்ணில் மேலை நாடுகள் இறங்கிவிட்டதைக் காட்டுகின்றன என்று எச்சரித்த அவர் இராணுவத்தில் இருந்து விலகிச் செல்லும் படையினருக்கு இது உங்கள் நாடு ஏமார்ந்துவிடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக