அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் வான்குவார் நகரில் சீக்கியக் கோவில் மற்றும் பள்ளி ஆகியவை கட்டப்பட்டு வந்தன. கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்த பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.இந்நிலையில் இங்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த இருவர் தப்பிவிட்டனர். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே தீ மளமளவென பரவி முழுக்கட்டிடமும் எரிந்து
தரைமட்டமாயின.
தரைமட்டமாயின.
லேண்ட்ஓவர் தடகள மையமாக செயல்பட்டு இந்த பகுதியை, போர்ட்லேண்ட் பகுதியில் வசிக்கும் 200 சீக்கியக் குடும்பங்கள் கடந்த 2008-ம் ஆண்டு விலைக்கு வாங்கி புதிதாக கட்டிடம் கட்டி வந்தனர்.
பின்னர் பழைய இடத்தில் செயல்பட்டு வந்த குருத்துவாரா பள்ளியை வரும் டிசம்பர் மாதம் இந்த புதிய கட்டிடத்திற்கு மாற்ற முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் கட்டிடம் தீக்கிரையாகிவிட்டது.
இந்த குருத்துவாராவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த தீவிபத்தின் பின்னணியில் சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக