என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை எ ன ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என சட்டத்துறை அ மைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாற்று த்திறனாளிகளுக்கான தொண்டுநிறுவனம் நடத்திவ ரும் சல்மான் குர்ஷித் போலிப்பத்திரங்களை கொ ண்டு பாரிய நிதி மோசடி செய்தததாக குற்றம் சுமத்தி வருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.இந்நிலையில் தன து வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து இன்று டெ ல்லி வந்து சேர்ந்த சல்மான் குர்ஷித், தன் மீதான கு ற்றச்சாட்டுக்களை முற்றாக
மறுத்துள்ளார். அவர் வந்திறங்கிய டெல்லி இந்தி ரா காந்தி விமான நிலையத்தில் கேஜ்ரிவால் ஆதரவாளர்கள் ஸ்லோக அட் டைகளுடன் கூச்சல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களை சந்தித்த அவர், போதுமான ஆதாரங்களுடன் என் மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக குர்ஷித் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நடத்தும் சாகீர் ஹுசைன் தொண்டு நிறுவனத்தின் பாரிய நிதி மோசடி நடைபெற்றிருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று குற்றம் சுமத்தி ஆதாரங்கள் வெளியிட்டதை அடுத்து அர்விந்த் கேஜ்ரிவாலும், இவ்விடயத்தில் போர்க்கொடி உயர்த்தியிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக