பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தே.மு.தி.க க ட்சியின் எம்.எல்.ஏ அனகை முருகேசன் இன்று கதி செய்யப்பட்டார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மீனம்பாக்கம் விமான நிலைய த்தில் வைத்து நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டன ர்.அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்- அ மைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதனால்
ஆத்திரமடைந்த விஜயகாந்த், மிகவும் ஆவே சத்துடன், “நாட்டில் எவ்வளவோ பிரச்சினை உள்ளன. இதைப்பற்றி கேள்வி கேட்கிறீர்களே” என்றார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது செய்தியாளர் ஒருவரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ.வான அனகை முருகேசன் கீழே தள்ளி விட்டார். இதுதொடர்பாக விமான நிலைய போலீசாரிடம் விஜயகாந்த் மற்றும் அனகை முருகேசன் மீது புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அனகை முருகேசனை இன்று போலீசார் கைது செய்தனர். இவர், செங்கல்பட்டு தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக