அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத்
துவங்கியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக