தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.12

அதிக எடையுடைய இளவயதினருக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம்!


வயதுக்கு தகுந்த எடையை விட சற்றுக் கூடிய எடை யை உடைய இள வயதினருக்கு (teenagers) அவர்களி ன் வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறுநீரகம் செயலிழ க்கும் வாய்ப்பு ஏனையவர்களை விட 6 மடங்கு அதி கம் என சமீபத்திய ஆய்வுகள் கூருகின்றனஇதேவே ளை obese எனப்படும் மரபணுக் குறைபாட்டாலும் அ திக உணவு உட்கொண்டு உடற் பயிற்சி செய்யாமல் இருப்பதனாலும்
எடை அதிகமாகி குண்டாக உள்ள இள வயதினருக்கு சிறுநீரகம்
செயலிழக்கக் கூடிய வாய்ப்பு இவ்வாறு 19 மடங் கு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலே குறிப்பிட்ட இள வயதினருக்கு இந்த ஆபத்து குறைந்தது 25 வருடங்களுக்குள் ஏற்படலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவர்களுக்கு (diabetes) நீரழிவு நோய் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப் படும் வாய்ப்பே அதிகம் உள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இஸ்ரேலிலுள்ள டெல் ஹஷோமெர் எனும் இடத்தைச் சேர்ந்த ஷேபா மெடிக்கல் சென்டர் ஐச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதன் பொருட்டு ஜனவரி 1967 முதல் டிசம்பர் 1997 ஆம் ஆண்டு வரையிலான 17 வயதுடைய 1.2 மில்லியன் இளவயதினரின் மருத்துவ பதிவுகள் பரீட்சிக்கப் பட்டுள்ளன.

0 கருத்துகள்: