தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.12

இஸ்ரேல்: 550 பூனைகளை வீட்டில் வளர்த்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்.

இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல் ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இ வர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அ வை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று வி டுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக
தூங்க முடியவில்லை. ஏனெனில், தரையில் படுத்து தூங்காமல் அவரது சொகுசு படுக்கையில்
ஏறி உறங்குகின்றன. இதனால் தூக்கமின்றி அவதிப்பட்ட அவர் பூனைகளை எங்காவது கொண்டுபோய் விடும்படி தனது மனைவியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார்.

இதனால் மனம் வெறுத்த அவர் ஒரு விபரீத முடிவுக்கு சென்றார். அதாவது தனது மனைவி மீது இஸ்ரேலில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி இவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், தனது செல்ல பிராணிகளான பூனைகளை விட்டு பிரியமுடியாது என மனைவி மறுத்து விட்டார். எனவே அவரை கணவர் விவாகரத்து செய்து விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.

0 கருத்துகள்: