தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.12

கேரளா:சி.பி.எம்மின் கொலைவெறிக்கு பலியானவர்களின் மனைவியர் சந்திப்பு!


வடகரை:கேரளாவில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொலைவெறிக்கு பலியான என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸலின் மனைவி மரியமும், மகள் ஃபிதா ஃபாத்திமாவும் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட டி.பி.சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவுக்கு ஆறுதல் கூறினர்.சி.பி.எம் கட்சியை விட்டு விலகியவர்கள் என்றநிலை
யில் ஃபஸல் மற்றும் சந்திரசேகரனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சமமானவை என மரியம் கூறினார். முன்பு சி.பி.எம் கட்சியை விட்டு விலகிய  ஃபஸல் என்.டி.எஃபில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். இதன் காரணமாக பல மிரட்டல்களையும் சந்தித்தார் ஃபஸல். இறுதியில் நேருக்கு நேராக சந்திக்க திராணியற்ற சி.பி.எம் தீவிரவாதிகள் ஃபஸலை கொலைச் செய்தனர்.
அதைப் போலவே சி.பி.எம்மில் இருந்து விலகி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்த டி.பி.சந்திரசேகரனும் சி.பி.எம் தீவிரவாதிகளின் கொடூர கொலைவெறிக்கு பலியானார்.
‘ஒரு போதும் மனம் தளர்ந்து விடாதீர்கள்’ என்று ஃபஸலின் மனைவி மரியம் ரம்யாவுக்கு தைரியம் ஊட்டினார். ‘மரியத்தின் வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தது’ என்று ரம்யா கூறினார்.
News@thoothu

0 கருத்துகள்: