தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.12

ஐபிஎல் 5 : சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதிய சாம்பியன்


சென்னை :இன்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியி ல் இரண்டு முறை சாம்பியன் சென்னை சூப்பர் கி ங்ஸை கொல்கத்தா இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.இவ்வாண்டு ஐபிஎல் போ ட்டிகளில் டாஸ் அவ்வளவாக கை கொடுக்காத தோனி இறுதி போட்டியில் டாஸ் வென்று பேட்டி ங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்க ளாக இறங்கிய முரளி விஜயும்
ஹஸ்ஸியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அருமையாக விளையாடிய முரளி விஜய் 32 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அடுத்து ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்தார் ரெய்னா. இருவரும் நிதானமாகவும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விளையாடிய நிலையில் ஹஸ்ஸி 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவ்வாண்டு ஐபிஎல் போட்டிகளில் சோபிக்காத ரெய்னா அதை ஈடு செய்யும் வகையில் அதிரடியாக ஆடினார்.
38 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரி உதவியுடன் 73 ரன்கள் எடுத்த ரெய்னா ஆட்டத்தின் கடைசி பந்தில் லீயிடம் கேட்ச் கொடுத்து சாகிப் அல் ஹசன் பந்தில் அவுட்டானார், தோனி தன் பங்குக்கு 14 ரன் எடுக்க சென்னை 190 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. கொல்கத்தாவின் துருப்பு சீட்டாக கருதப்பட்ட சுனில் நாராயன் உள்ளிட்ட அனைத்து பந்து வீச்சாளர்களையும் சென்னை வீரர்கள் அடித்து துவம்சம் செய்தனர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா துவக்கத்திலேயே அவ்வணியின் அதிகபட்ச ரன்கள் குவித்த கேப்டன் காம்பீர் முதல் ஓவரிலேயே 2 ரன் எடுத்து வெளியேற காலிஸுடன் ஜோடி சேர்ந்த பிஸ்லா சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். பிஸ்லாவின் அதிரடி தொடர சென்னையின் ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை கனவு தகரும் சூழல் ஏற்பட்டது.
இரண்டாம் டைம் அவுட்டின் போது 42 பந்துகளில் வெறும் 62 ரன் எடுக்க வேண்டிய நிலையில் கொல்கத்தா இருந்தது. பவுலர்களை தோனி மாற்றியும் எப்பயனுமில்லை. ஒரு வழியாக பிஸ்லா 48 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுதது மோர்கல் பந்தில் பத்ரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானதும் சென்னைக்கு சிறிது நம்பிக்கை பிறந்தது.
தில்லிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய சுக்லா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களில் அவுட்டாக அடுத்து யூசுப் பதான் காலிஸுடன் ஜோடி சேர்ந்தார். காலிஸ் பவுண்டரிகளாக விளாசிய நிலையில் 18வது ஓவரின் முதல் பந்தில் யூசுப் பதான் 1 ரன் எடுத்து அஸ்வினின் பந்தில் பத்ரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கடைசி 3 ஓவரில் 27 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 18 வது ஓவரில் அஸ்வின் 7 ரன் கொடுக்க 2 ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19வது ஓவரை ஹெல்பின்ஹாஸ் சிறப்பாக பந்து வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் காலிஸ் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 6வது பந்தில் சாகிப் அவுட்டாக அம்பயர் உயரம் காரணமாக நோ பால் கொடுக்க 3 ரன்களும் அடுத்த பந்தில் பவுண்டரியுமாக 7 ரன்கள் எடுக்க மீண்டும் ஆட்டம் இழுபறி நிலைக்கு சென்றது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்றி பெறலாம் எனும் நிலையில் ஆட்டம் எப்பக்கம் வேண்டுமானாலும் மாறும் சூழல் இருந்தது. முதல் பந்தில் திவாரி ரன் அவுட்டிலிருந்து தப்பித்து 1 ரன் எடுக்க 5 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 2வது பந்தில் 1 ரன் சாகிப் எடுக்க 3வது பந்தில் திவாரி பவுண்டரி எடுக்க 3 பந்தில் 3 ரன் எனும் நிலை ஏற்பட்டது. 4வது பந்தில் திவாரி பவுண்டரி அடிக்க 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா வென்று .பி.எல் கோப்பையை முதல் முறையாக வென்றது. 87 ரன்கள் எடுத்த பிஸ்லா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 கருத்துகள்: