தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.12

சிரியாவின் ஹவுலா நகரில் ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை!


சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில், நேற்று இடம்பெற்ற அரச படைகளின் தாக்குதலில், ஒரே நாளில் 90 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.ஹவுலா நகரில், அரச படைகளில் ஷெல் தாக்குதலில் அதிகளவானோர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். சிலர் குடும்பம் குடும்பமாக கொல்லப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். சிரியாவில் இடம்பெற்ற அண்மைய வன்முறைகளில் மிக மோசமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

போராட்ட குழுவினரும் சிரியாவில் சில பகுதிகளை தங்களது கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும், இரு தரப்பினரும் ஆயுதங்களை கைவிடாவிடின் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரிய அரச படைகளிடம் சிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், போராட்டகாரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வேண்டுமென்றே படுகொலை செய்யப்படுவதாகவும் எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிரிய அதிபர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 2011 மார்ச் மாதம் முதல் மக்கள் போராட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10,000 ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நாவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ka.


0 கருத்துகள்: