தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.5.12

காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்கள் தற்காலிக பணிநீக்கம்


மெரினா கடற்கரையில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடியை படமெடுத்து மிரட்டிய 3 பொலிஸ்காரர்களை சென்னை கொமிஷனர் திரிபாதி, தற்காலிக பணிநீக்கம் செய்தார்.காதலர்களின் பொழுதுபோக்கு பூங்காவாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகின்றது.இங்கு காலை முதல் இரவு வரை ஏராளமான ஜோடிகள் வந்து போகின்றார்கள். நெருக்கமாக இருக்கும் சில காதல் ஜோடிகளை ரோந்து பொலிஸார் எச்சரித்து அனுப்புவர்.இந்நிலையில்
கடந்த 21ம் திகதி மெரினாவுக்கு வந்த ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்தனர். இதை ரோந்து பொலிஸார் படமெடுத்து மிரட்டி பணம் வசூல் செய்துள்ளனர்.



இந்த விவகாரம் பொலிஸ் கொமிஷனர் திரிபாதிக்கு தெரிய வர, இதுகுறித்து அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.


விசாரணையில், காதல் ஜோடியிடம் மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றும் சக்திவேல், முக்தீர், அன்பழகன் ஆகியோர் பணம் வசூலித்தது தெரிய வந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கொமிஷனர் திரிபாதி தற்காலிக பணிநீக்கம் செய்தார்.

0 கருத்துகள்: