சீனாவில் அடுத்தடுத்து 11 பேரை கொன்ற ‘சீரியல் கில்லர்’ ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளன ர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜின்னிங் கவுன்டி பகுதியில் அடுத்தடுத்து 11 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த தொடர் கொலை ச ம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ப லர் வெளியே செல்லவே அஞ்சினர். ஆனால், போ லீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும்
ஏற்பட வில்லை. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை களத்தில் இறங்கினர். இவர்களும் உள்ளூர் போலீசாரும் கடந்த 20 நாட்களுக்கு மேல் நடத்திய அதிரடி தேடுதலில் சந்தேகத்தின் பேரில் 56 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் வசித்த வீட்டின் அருகே தனியாக செல்வோரில் குறிப்பாக இளைஞர்களை கண்காணித்து கொலை செய்துள்ளார். கொலை செய்ததை மறைக்க சிலரின் உடல் உறுப்புகளை வெட்டி எரித்துள்ளார். சிலரின் உடல்களை புதைத்துள்ளார். இது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இவர் 1979ல் ஒரு கொலைவழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக