தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

'ராமர் பாலம்' என்பது ஓர் கற்பனை - மருத்துவர் ராமதாஸ்


பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் எ‌ன்றும் ராம‌ர் பால‌‌ம் எ‌ன்பது க‌ற்பனையானது‌ம் எ‌ன்று‌ம் கூறியுள்ளார்.இது தொட‌ர்பாக இன்று அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள்,ராமர் பாலம் என்ற கற்பனையான இயற்கை அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான
சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட வேண்டும் என்றும் கருதுவது தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமையும்.இந்த நிலைப்பாட்டை தமிழக முதல்வ‌ர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு மதநம்பிக்கைகள் தடையாக இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தியுள்ளது என்பதால் கற்பனை கதைகளுக்கு செவி மடுக்காமல், சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்து, சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எ‌ன்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: