தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

விமானத்தில் மது தர மறுத்த பணியாளர்களுடன் கட்டிப்பிடித்து சண்டை போட்ட 50 வயது அமெரிக்கப் பெண் கைது.

மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள் ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வா ய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் பெக்கி எ ஸ் அல்பெட்டாடி சன்செஸ் என்ற 50 வயது பெண்ணும் பயண ம் செய்தார். விமானத்தில் மது வழங்கப்பட்டது. அதை குடித்து விட்டு மேலும் மேலும் மது கேட்டு வாங்கி குடித்தார் பெக்கி. ஒரு கட்டத்தில் போதை அதிகமானதால், மது
வழங்க விமா ன பணியாளர்கள் மறுத்துவிட்டனர். ஆத்திரம் அடைந்த பெக்கி, அவர்களை அடித்து உதைத்து கீழே தள்ளி கட்டிப்புரண்டு சண்டை போட்டார். பணியாளர்களை தரக்குறைவாக திட்டியும், காரி துப்பியும் ரகளை செய்தார். அதன்பின் விமானம் தரையிறங்கியதும், புகாரின்படி பெக்கியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

0 கருத்துகள்: