தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன்சிங் ஒப்புத


பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. தென்கொரியா தலை நகர் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்,
பாகிஸ்தானில் இருந்து பிரதமர் கிலானி ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு இடையே, மன்மோகன்சிங்கும், கிலானியும் சந்தித்து பேசினர். பொருளாதாரம், பாதுகாப்பு உளளிட்ட பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும் பாகிஸ்தானில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையையும், இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பையும் மன் மோகன்சிங்கிடம் விளக்கிய கிலானி, இதை சமாளிக்க இந்தியா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிலானியின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க, மன்மோகன்சிங் ஒப்புக் கொண்டார். அவசர கால தேவை அடிப்படையில் இந்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்சாரம் பஞ்சாப் மின்பாதை வழியாக, பாகிஸ்தானுக்கு விரைவில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. மின்சாரம் தர ஒப்புக்கொண்ட மன்மோகன்சிங் கிற்கு, கிலானி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'தி நியூஸ்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: