மாவோயிஸ்ட்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள இத்தாலியரை விடுவித்து விடுவர்' என, மாவோயிஸ்ட்களால் அரசுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, மத்தியஸ்தர்கள் சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி கூறியுள்ளனர்.புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின்
கோரிக்கை தொடர்பாக, எந்த விதமான உருப்படியான பதிலும் அளிக்கப்படவில்லை.
அவர்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவித்து விடுவர். இல்லையெனில், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதிலிருந்து விலகி விடுவோம்.மாநில அரசுடன் நாங்கள், கடந்த ஐந்து நாட்களாக, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருந்தாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், இந்த விவகாரத்தில் முதல்வர் நவீன்பட்நாயக் தலையிட வேண்டும் என கேட்டுள்ளோம். அவரோ நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.
"போலி என்கவுன்டரில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவோயிஸ்ட்கள் போல செயல்பட்டதாக, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். பல்வேறு வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்பதே, மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள்.இவ்வாறு மத்தியஸ்தர்கள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக