தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.12

ஆகாயத்தில் இருந்து 71000 அடி உயரத்தில் இருந்து குதித்து ஆஸ்திரிய வீரர் சாதனை.


ஆஸ்திரியாவை சேர்ந்தவர் பாம்கார்ட்னர் (42). இவர் ராணுவ முன்னாள் பாராசூட் வீரர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து 2500 தடவை பாராசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் தைவானின் தைபேயில் உள்ள 101 அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்தும் குதித்துள்ளார். 620 அடி ஆழ குரோசியாவின் இருட்டு குகைக்குள் குதித்து இருக்கிறார்.இந்த நிலையில், இவர் ஆகாயத்தில் இருந்து சுமார் 71,581 அடி
உயரத்தில் அதாவது 13.6 மைல் தூரத்தில் இருந்து சமீபத்தில் குதித்தார். நியூ மெக்சிகோவில் உள்ள பாலைவனத்தில் ஹீலியம் பலூன் மூலம் உயரத்தில் பறந்து அங்கிருந்து பாராசூட் மூலம் பத்திரமாக தரை இறங்கினார். அதற்காக அவர் 8 நிமிடம் 8 வினாடிகள் எடுத்து கொண்டார். இது போன்ற சாதனை படைத்தவர்களில் இவர் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர் அடுத்தபடியாக ஆகாயத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைப்பதே தனது லட்சியம் என தெரிவித்தார். இதற்காக தற்போது அவர் பயிற்சி பெற்று வருகிறார். அதற்கு முன்னோடியாக ஆகாயத்தில் 90 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 1960-ம் ஆண்டில் கிட்டிங்கர் என்ற விமானப்படை விமானி 1 லட்சத்து 2 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: