தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.12

அமெரிக்கா உதவியுடன் வங்கதேசம் முதல்முறையாக சாட்டிலைட் தயாரிக்கிறது


வங்கதேச நாடு முதல் முறையாக அமெரிக்காவின் உதவியுடன் சாட்டிலைட் தயாரிக்க உள்ளது. வங்க தேச நாடு தகவல் தொடர் மற்றும் இயற்கை சீற்றங் கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு, வெளிநாடுக ளின் சாட்டிலைட்டுகளை நம்பியே உள்ளது. இதற்கா க ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வாட கையாக செலவிடுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண் டுக்குள் சொந்த
சாட்டிலைட் ஏவ வங்கதேச அரசு திட் டமிட்டுள்ளது. இதற்கு உதவ அமெரிக்காவின் ஸ்பேஸ் பார்ட்னர்ஷிப் இன்டர் நேஷனல் என்ற கம்பெனி முன்
வந்துள்ளது.

இதுகுறித்து இந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர் புரூஸ் டி கிரசெல்ஸ்கி கூறுகையில், மேரிலேண்டில் உள்ள எங்கள் கம்பெனி, வங்கதேசத்துக்காக சாட்டிலைட்டை வடிவமைக்கும். அதை உருவாக்கவும், விண்ணில் ஏவவும் வேறு கம்பெனியிடம் ஒப்பந்தம் செய்யப்படும் என்றார். வங்கதேச அதிகாரிகள் கூறுகையில், சொந்த சாட்டிலைட் ஏவுவதன் மூலம், வங்கதேசத்தின் தகவல் தொடர்பு மேம்படும். அத்துடன் இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டி அறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்றனர்.

0 கருத்துகள்: