சீனாவை பற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத் தும் வகையில் வதந்தி செய்திகளை பரப்பியதாக 6 வ லைப்பதிவாளர்களை கைதுசெய்துள்ள சீன காவற்து ரையினர், 16 இணையத்தளங்களையும் முடக்கியுள்ள னர். சீன தலைநகர் பீஜிங்க் தெருக்களில் இராணுவ வாகனங்கள் நிலை கொண்டிருக்கின்றன என்பதே கு றித்த வலைப்பதிவுகள் வெளியிட்ட செய்தியாகும். இ து இராணுவ புரட்சிக்கான அறிகுறி எனும் அளவுக்கு இச்செய்தி தாக்கத்தை
ஏற்படுத்தியிருந்தது.'இவ்வதந்திகள் மக்களிடையே எதிர்மறையான எண்ணக்கருத்துக்களை தோற்றுவித்துள்ளதாக' சீனாவின் மாநில இணையத்தள தகவல் காரியாலயம் (SIIO) குற்றம் சுமத்தியிருந்தது.
ஏற்படுத்தியிருந்தது.'இவ்வதந்திகள் மக்களிடையே எதிர்மறையான எண்ணக்கருத்துக்களை தோற்றுவித்துள்ளதாக' சீனாவின் மாநில இணையத்தள தகவல் காரியாலயம் (SIIO) குற்றம் சுமத்தியிருந்தது.
இவ்வதந்தி செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் சீனாவின் மிக பிரபலமான வலைப்பதிவுகளான Sina Weibo மற்றும் Tencent Weibo ஆகியவற்றில் பதியப்படும் பதிவுகளுக்கு வாசகர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான Bo Xilai, பதவி உயர்வு செய்யப்படவிருந்த நிலையில் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பிரித்தானிய வர்த்தகர் ஒருவர், சீனாவில் விடுதி ஒன்றில் மரணமடைந்தது தொடர்பில் Bo Xilai க்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய இணையத்தளங்களையும் சீன அரசு முடக்கிவந்தது. தற்போது இவ்வதந்திகளின் பின்னணியிலும் அவருடைய ஆதரவாளர்களுக்கு தொடர்பிருக்கலாம் என கருதப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக