தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.12

கடாபியைப் போல் என்னை கொல்ல விடமாட்டார்கள் என்கிறார் மஹிந்த


லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்ற தைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு ம க்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டா ர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி மை தானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ என்ற தலை ப்பிலான கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இ தனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையி ல்,“லிபியத் தலைவர் கடாபியைப் போன்று பாதையில் இ ழுத்து சென்று நாட்டுத்
தலைவரைப் பலியாக்க இந்நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் ஏகாகிபத்தியவாதிகளான ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே எமது நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர்.
அவர்கள் இவ்வாறு பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.
இருப்பினும் உள்நாட்டுப் பிரதானிகள் சிலர் அன்றைய மன்னருக்கு எதிராகச் சதி செய்து ஆங்கிலேயரிடம் நாட்டைக் காட்டிக் கொடுத்ததன் விளைவாகவே ஆங்கிலேயரால் எம்மை ஆக்கிரமிக்க முடிந்தது.
ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இன்று இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.
ஒரு சில அரசசார்பற்ற நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் அமைப்புகளும் கனவு காணும் சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முன், கட்சியின் அதிகாரத்தைக் காப்பாறிக் கொள்ளுங்கள் என்பதைத்தான். அதற்கு பின் நாட்டைப் பற்றி சிந்திக்கலாம். இவர்களது பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது நாட்டின் பாதுகாப்புக் கருதி அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றார்.
ஜெனீவா தீர்மானத்தால் நாட்டில் எதுவுமே நடந்துவிடாது. ஜெனீவா தீர்மானம் வேறு, பொருளாதாரத் தடை வேறு. நல்லிணக்க ஆணைக்குழு எமது ஜனாதிபதி நியமித்த ஒன்று. இது சர்வசே குழு அல்ல. அக்குழவின் தீர்மானத்தை அமுல்படுத்த கோரியே சர்வதேசம் வேண்டுகிறது. அதனை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அலுத்கமகே, டியூ குணசேகர, தினேஷ் குணவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண அமைச்சர் அனுஷியா சிவராசா உட்படப் பலர் உரையாற்றினர்.

0 கருத்துகள்: