மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆங் சான் சூ கியி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோக பூர்வ முழுமையான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்ப டாத நிலையிலும், காவ்ஹ்மு பிரதேச தொகுதியில் போ ட்டியில் வேட்பாளாராக களமிறங்கிய சூ கியி அங்கு வெ ற்றி பெற்றுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு மியன்மாரின் 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் இராணுவ ஆதரவு
கட்சி அமோக வெற்றி பெற்றது. எனினும் அத்தேர்தலை சான் சூகி புறக்கணித்திருந்தார். இந்நிலையில் மீதமுள்ள 45 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை போட்டியிட தீர்மானித்த ஆன் சான் சூகியியின் கட்சி அனைத்து வேட்பாளர்களையும் பிரச்சாரத்திற்கு களமிறக்கியிருந்தது.இத்தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியா சார்பில் 2 கமிஷனர்கள் இடம்பெற்றிருந்தனர், இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் பின்னர் தற்போது முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சான் சூ கீ உட்பட அவரது கட்சியினர் 40 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவரான சூங் கீ யி தனது 20 வருட கால வாழ்க்கையை வீட்டுக்காவலிலேயே கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அவருக்கு கிடைத்துள்ள வெற்றி நாட்டின் அமைதி நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெகுமதியாக கருதப்படுவதுடன், தென்கிழக்கு ஆசிய நாடொன்றின் வரலாற்று ரீதியிலான தேர்தல் முடிவொன்றாக மாற்றம் பெற்றதுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் 2015ம் ஆண்டு மியன்மாரில் நடைபெறும் பொது தேர்தலில் அங்கு சாங் சூ கீ யின் ஜனநாயக கட்சி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், மியன்மாரின் அதிபராக ஆங் சான் சூ கியி தெரிவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக