ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை தாக்கியதாக கூறப்படும் போலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 போலிஸ் உத்தியோகத்தர்களை நாளை திங்கட்கிழ மை வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெ னிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவ ம் தெல்தெனிய ரங்கல போலிஸ் பிரதேசத்தில் நேற் று முன்தினம் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது
. போலிசார் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினையடுத்து முச்சக் கர வண்டி ஒன்றில் ரோந்து சேவை சென்றுள்ளனர்.
. போலிசார் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினையடுத்து முச்சக் கர வண்டி ஒன்றில் ரோந்து சேவை சென்றுள்ளனர்.
இதன் போது எதிரே வந்த வாகனம் ஒன்றினை மறித்து போலிசார் சோதனை மேற்கொண்ட போது இரு தரப்பினர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன் பின்னர் வாகனத்தில் வந்தவர்கள் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் தாங்கள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தாக்கிய ஐந்து போலிஸ் கான்ஸ்டபிள்களை போலிசார் கைது செய்து வெள்ளிக்கிழமை மாலை தெல்தெனிய நீதிபதிமுன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிபதி சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி (இன்று வரை ) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக