தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.12

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்’ இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ள ஐநாவின் பார்வை!


“காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என மத்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.ஐ.நா., பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர், குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்தி, அது உண்மை என தெரியவந்து அறிக்கை சமர்ப்பித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டிற்கு, ஐ.நா., சார்பில் கடிதம் அனுப்பப்படும். அதில், தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்.

அதேபோல், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் கூறியுள்ளதாவது:

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரை சுட, ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் அமலில் உள்ளது.

இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

என்னுடைய காஷ்மீர் பயணத்தின்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என, பலரும் வர்ணித்தனர்.

இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது. அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும், வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம்.இவ்வாறு ஹெய்னஸ் கூறியுள்ளார்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் என, காஷ்மீரில் ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஐ.நா., அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

0 கருத்துகள்: