தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.11

அமெரிக்க உறவை முற்றிலுமாக பரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு தூதர்கள் கோரிக்கை

இஸ்லாமாபாத், டிச. 16-  அமெரிக்காவுடன் உள்ள உற வை முற்றிலுமாக மறு பரிசீலனை செய்யுமாறு பாகி ஸ்தானுக்கு அந்த நாட்டின் தூதர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெ ரி க்க கூட்டுப் படையினர், பாகிஸ்தான் எல்லையில் கட ந்த 26-ந் தேதி அன்று தாக்குதல் நடத்தியதில் பாகி ஸ்தான் ராணுவ வீரர்கள் 24
பேர்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்க பிரதமர் யூசுப் ராசா கிலானி முடிவு செய்தார்.
அதற்காக, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற கமிட்டியின் ஆலோசனைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நாடுகளில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதர்களின் யோசனைகள் ஆகியவற்றை கேட்க தீர்மானித்தார். அதன்படி, இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் தூதர்கள் மாநாடு நடைபெற்றது. வெளியுறவு துறை ஏற்பாடு செய்த அந்த மாநாட்டில், அமெரிக்காவில் உள்ள தூதர் செர்ரி ரகுமான் மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தூதர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் தூதர்கள் கூறியதாவது:-
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற அடிப்படையில் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும். முஷ்ரப் ராணுவ ஆட்சியின்போது செய்து கொண்ட உடன்பாடுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். சாம்சி விமானப்படை தளம் போன்ற பாகிஸ்தான் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
அமெரிக்காவுடனான உறவில் விரிவான அளவில் மாற்றங்கள் தேவை. அமெரிக்காவுடன் உள்ள உறவை முற்றிலுமாக முதலில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும். கடந்த காலங்களில் போல, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க உளவுத் துறையினர் சுதந்திரமாக செயல்படுவதை இனியும் அனுமதிக்க கூடாது.
வருங்காலங்களில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் உறவானது விதிமுறை மற்றும் வரையறைக்கு உட்பட்டு வெளிப்படையான நடைமுறையாக இருக்க வேண்டும். அமெரிக்க உறவானது, முற்றிலும் சார்ந்திருக்கும் நிலையாக இருப்பதை அனுமதிக்க கூடாது. அமெரிக்காவிடம் இருந்து குறைவான எதிர்பார்ப்பை மட்டுமே பாகிஸ்தான் வைத்திருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தான்-அமெரிக்கா இடையே மேற்கொள்ள இருக்கும் 'பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்' என்பது ஆப்கானிஸ்தானின் சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதாகவே அமையும். இவ்வாறு தூதர்கள் தெரிவித்தனர். இந்த மாநாட்டில் பிரதமர் யூசுப் ராசா கிலானி, வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: