தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.11

ஈராக் போர் செலவு 1.000.000.000.000 டாலர்கள்

ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நு ழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வ ருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இத ற்காக இவர்கள் செலவிட்ட
மொத்தத் தொகை 1.000 .000.000.000 டாலர்கள் ஆகும். இந்தப் போரில் 4.500 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டன, 1.00.000 ஈராக்கியர் கொலையுண்டார்கள். சுமார் ஒன்றரை மில்லியன் அமெரிக்கப்படைகள் அந்த மண்ணில் இறக்கப்பட்டன. இப்போது ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் போக சுமார் 200 வரையான இராணுவ நிபுணர்கள் அங்கு நிலை கொண்டு ஈராக்கிய படைகளை வழி நடாத்துவார்கள். சதாம் உசேனிடம் அணுகுண்டுகள் உட்பட, உயிரியல் ஆயுதங்களும் உண்டெனக்கூறிய அமெரிக்கா அவரே சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குபவர் என்றும் கூறியது. இப்போது சதாமிடம் அணு குண்டுமில்லை, இரசாயன குண்டும் இல்லை, சர்வதேச பயங்கரவாதத்திற்கு உதவ சதாமும் இல்லை ஆனால் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் அமெரிக்கப்படைகள் வெளியேறுவதால் மறுபடியும் அங்குள்ள சியா, சன்னி முஸ்லீம் குழுக்களிடையே மோதல் ஆரம்பிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்: