கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது.
கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் தெரிவித்தார்.
மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது.
கத்தாஃபியின் பிறந்த நாடான ஸிர்த்திலோ அல்லது மிஸ்ருத்தாவிலோ அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அடக்கஸ்தலம் புண்ணியஸ்தலமாக மாறும் வாய்ப்பு இருப்பதால் கடலில் உடலை அடக்கம் செய்யவும் ஆலோசித்து வருகின்றனர். இல்லையெனில் ரகசியமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படும். கத்தாஃபியின் ரகசிய புலனாய்வு அதிகாரி அப்துல்லா அல் ஸனூஸி வடக்கு நைஜீரியாவிற்கு சென்றுள்ளதாக செய்தி கூறுகிறது.
நேற்று நடப்பதாக அறிவித்திருந்த சுதந்திர பிரகடனம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெங்காசியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஜூனில் தேர்தல் நடத்துவதாக திட்டமிட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் ஜோர்டானில் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக