தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.11

ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர் தேர்தல் : பாகிஸ்தான் வெற்றி


பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா பாதுகாப்பு சபையில், இத்தேர்தல் நடைபெற்றது. ஐ.நா பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினருக்கான தேர்தலில் பாகிஸ்தான் வெற்றிபாகிஸ்தான் உட்பட 9 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டன. இதில் 129/193 என்ற வாக்கு வீதத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. கஷகிஸ்தான் 55 வாக்குகளை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் 7 வது தடவையாக பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக தெரிவாகியுள்ளது.

சீனா, இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியா ஏற்கனவே ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலில உறுப்பு நாடாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் மாத்திரமே இத்தற்காலிக உறுப்பு நாடு எனும் அங்கீகாரம் கொடுக்கப்படுவதால், அவ்வப்போது தேர்தல் மூலமாக இவை மாறிக்கொள்ளும். ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர ஐந்து உறுப்பு நாடுகளும், 10 தற்காலிக 10 உறுப்பு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.

இம்முறை போட்டியில் பாகிஸ்தானுடன், கிர்கிஸ்தான், மரிடானியா, மொராக்கோ, டோகா, அஜர்பைஜான், ஹங்கேரி, சுலோவேனியா, கௌதமாலா ஆகிய நாடுகள் போட்டியிட்டன.

இந்தியாவின் பதவிக்காலம் 2012 டிசெம்பர் 31 இல் நிறைவடைகிறது. பாகிஸ்தான் 2013 டிசெம்பர் 31 வரை உறுப்பினர் பதவியில் நீடிக்கவுள்ளது.

0 கருத்துகள்: