தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.11

துனிசியாவில் நேற்று வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தேர்தல்


முன்னாள் சர்வாதிகார அதிபர் பென் அலி பதவியிறக்கப்பட்டதன் பின்னர் துனிசியாவில் முதன்
முறையாக சுதந்திர ஜனநாயக தேர்தல்நெற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சியை தொடக்கி வைத்த துனுசியாவில், அதிபர் பென் அலிக்கு எதிரான போராட்டங்களில் 200 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இப்புரட்சி நடைபெற்று
9 மாதங்களின் பின்னர் தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 217  உறுப்பினர் கொண்ட சட்டசபைக்காக 11,000 பேர் போட்டியிடுகின்றனர்.

7 மில்லியன் துனிசிய மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நவீனப்படுத்தப்பட்ட் இஸ்லாமிய என்ஹாத்தா கட்சி, ஜனநாயக கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று மாலை தேர்தலின் முதலாவது முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், இன்று லிபியா முழு சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்தவுள்ளதுடன், அடுத்து வரும் 1 வருடத்திற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தும், என இடைக்கால அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: