தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.11

‘கடாபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்’


கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது.
கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ
உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் பிபிசியிடம் தெரிவித்தார்.
மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது.
சடலத்தைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
கடாபியின் சடலத்துக்கு என்ன நடக்கவேண்டும் என்பது பற்றி வெவ்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவியதாக பிபிசி செய்தியாளர் கூறினார்

0 கருத்துகள்: