தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

ஐ.நா. வில் பார்வையாளர்களை உருக வைத்த சனல் 4 ஆவணப்படம் - "இலங்கையில் கொலைக்களம்" நழுவிச் சென்ற இலங்கைப் பிரதிநிதி


ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில்
"இலங்கையின் கொலைக்களம்" என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

இத்தொகுப்பை இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் உட்பட ஏனையோரும் பார்வையிட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது சனல் 4.

பார்வையிட்டோரை உரு
க வைத்த வீடியோ காட்சிகள் கொடூரமானவையாக இருந்தததாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் கண் கலங்கிய படியும் ஒரு சிலர் குண்டுச் சத்தங்களை கேட்க முடியாமலும் இருந்ததை அவதானிக்க கூடியதாக உள்ளது.சனல் 4 செய்தித் தொடர்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தனக்கு மீட்டிங்க் இருப்பதாக கூறியவாறு வீடியோவைப் பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பதில் கூறாமல் அங்கிருந்து நழுவிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
எனினும் இவ்வீடியோ காட்சிகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.SriLanka;s Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: