லாகூர், ஜூன்.1- மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்காக வாதாட வக்கீலை ஏற்பாடு செய்ய முடியாது என்று பாகிஸ்தான் கைவிரித்து விட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கள்ளத்தனமாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ்
ஓட்டலுக்குள் நுழைந்து
அங்கு தங்கி இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியர்களுடன் பல வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். அவர்களில் அமெரிக்கவாசிகளான ரப்பி கேபிரியல் நோவா ஹோல்ட்ஸ்பெர்க், அவர் மனைவி ரிவ்கா ஆகிய யூதர்களும் பலியானார்கள். இந்த தம்பதிகள் அவர்களது உறவினர்கள் புருக்ளின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.ஓட்டலுக்குள் நுழைந்து
இந்த வழக்கில் குற்றவாளிகளாக லஸ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், அந்த அமைப்பின் தளபதிகள் ஜகியூர் ரெகிமான் லக்வி, அசம் சீமா, சஜித் மஜீத் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தலைவர் பாஷா, முன்னாள் தலைவர் நதீம் தாஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நஷ்ட ஈடாக ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 2 பேருக்கும் தரப்படவேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ள ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைவர் ஆகியோருக்காக பாகிஸ்தான் அரசு வக்கீல் வைத்து வாதாட இருக்கிறது. இதை பார்த்த ஹபீஸ் சயீத் இதேபோல தனக்காகவும் பாகிஸ்தான் அரசாங்கம் வாதாட வேண்டும் என்று பாகிஸ்தான் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசாங்க வக்கீல், "பாகிஸ்தான் அரசாங்கத்தின் அங்கம்தான் ஐ.எஸ்.ஐ. என்பதால் அதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் வக்கீல் வைத்து வாதாடுகிறது. ஆனால் ஹபீஸ் சயீத் தனி நபர். அவருக்காக அரசாங்கம் வாதாட முடியாது" என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து அமெரிக்க கோர்ட்டில் தனிநபரை காப்பாற்ற உதவும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கமே வாதாடுவதற்கு வகை செய்யும் சட்டத்தை கொண்டுவரும்படி சயீத்தை கேட்டுக்கொண்டு நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக