தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

மூச்சுதிணறல் வந்து இறந்து போன திமிங்கிலம்: படங்கள் இணைப்பு!


20 டன் எடையுடன் 44 அடி நீளத்துடன் கிளவ்லேண்ட் ரெட்கார் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பிரம்மாண்ட திமிங்கலம் (படங்கள்) மூச்சு திணறல் காரணமாக இறந்தது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காப்பாற்றுவதற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் இதர ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் அந்த முயற்சியில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதிக எடை உள்ள இந்த உயிரினத்தை மீண்டும் கடலில் மிதக்க விடும் முயற்சி மிக மோசமானதாக இருந்திருக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


பகுதி அளவு கடல் நீரில் இருந்த திமிங்கலம் காலை 9 மணிக்கு இறந்தது. தீயணைப்பு துறையினர் ஜெட் மூலமாக திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்க்க முடியுமா என்றும் ஆலோசனை செய்தனர்.வடக்கு கடல் பகுதியில் பல திமிங்கலங்கள் உள்ளன. இருப்பினும் பற்கள் உடைய பெரும் தலை உள்ள ஸ்பெர்ம் திமிங்கலத்திற்கு உரிய உணவு வகைகள் இல்லை. எனவே ஸ்பெரீம் திமிங்கலம் இந்தப் பகுதியில் இறந்து இருக்கலாம் என பிரிட்டிஷ் கடல் உயிரின மீட்பு குழுவைச் சேர்ந்த ரிச்சரிடு லிடர்டென் தெரிவித்தார்.

இறந்து போன திமிங்கலத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இது போன்ற எதிர்பாராத முடிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 5 டன் எடை வரை உள்ள கடல் உயிரினத்தையே மீண்டும் கடலில் கொண்டு விடும் வசதிகள் மீட்புக் குழுவினரிடம் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட எடையை விட 4 மடங்கு அதிகம் உள்ள ஸ்பெர்ம் திமிங்கலத்தை மீண்டும் கடலில் கொண்டு விட முடியாத நிலை மீட்பு குழுவுக்கு ஏற்பட்டது. தரையிலேயே பல மணி நேரம் உணவு இல்லாத சூழலில் திமிங்கலம் இறந்தது சரியான முடிவு என்றும் அதனை பார்த்தவர்கள் கூறினர்.

0 கருத்துகள்: