தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், வறுமையாலும் வாடும் வேளையில் ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணத்தை சம்பாதித்து வரும் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்ட நாடகம் இன்று டெல்லியில் துவங்கியுள்ளது.


இரண்டரை லட்சம் சதுர அடியில்
கட்டப்பட்ட பந்தல்



15 அடி உயரத்தில் குளிரூட்டப்பட்ட மேடை


60 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செயல்படும் மருத்துவமனை


ஒரு லட்சம் யூனிட் சுத்தமான தண்ணீரை சேகரித்துவைக்கும் வசதி


பந்தலில் எப்பொழுதும் தண்ணீர் பிடிக்கும் வசதி கொண்ட 1500 டேப்புகள்


பாபாவை தரிசிக்க மிகப்பிரம்மாண்டமான ஸ்க்ரீன்


100 சி.சி டி.விக்கள்


5000 ஃபேன்கள் மற்றும் கூலர்கள் 


என ஹைடெக் வசதிகளைக்கொண்ட உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திகொண்டிருக்கிறார்கள் பாபா ராம்தேவ்.பந்தல் முழுவதும் காவிநிறம் தான்.ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்களும்,’பாரத் ஸ்வாபிமான் நியாஸின்’ ஆதரவாளர்களும் திரண்டுள்ளனர்.போராட்டத்தில் கலந்துகொள்வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.18 கோடி ரூபாயை இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்காக ராம்தேவ் ஒதுக்கியுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.டெல்லி இதற்க்குமுன்பு ஒருபோதும் கண்டிராத போராட்டத்தை தான் ராம்லீலா மைதானத்தில் காணமுடிந்தது.


இதற்கிடையே ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான சுவாமி பாலகிருஷ்ணா இப்போராட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.ராம் தேவின் உண்ணாவிரதப்போராட்டம் ’ஐந்து நட்சத்திர சத்தியாகிரகம்’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 கருத்துகள்: