ஊழல், மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் யோகா குரு பாபா ராம்தேவ் ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரதம 2 மணிநேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக அவர் இவ்வாறு தற்காலிக இடைநிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.
எனினும் இப்பேச்சுவார்த்தையில் 100 விழுக்காடு ஒருமித்த
கருத்து எட்டப்படாவிடின் உண்ணாவிரதம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எமது கோரிக்கைகளுக்காக அரசு என்ன செய்ய முடியுமோ அதை எழுத்து மூலமாக எழுதி தரவேண்டும். அதை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் நேற்று சில கோரிக்கைகளை மத்திய அரசு பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் 100 விழுக்காடு ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என கூறிய ராம்தேவ், இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுமாயின் அதன் முழு பாராட்டும் அரசுக்கு தான் சென்றடையும் என தெரிவித்தார்.
இதேவேளை ராம்தேவின் உண்ணாவிரத பின்புலமாக பாரதி ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சாங் ( R.S.S )கட்சிகள் மற்றும் பாபர்மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி ரிதம்பராவும் கலந்துகொண்டுள்ளதாகவும்ஆதலால் இந்தபோராட்டத்தை RSS தூண்டிவிட்டு மறைமுகமாகசெயல்பட்டு ஆட்சியை கவிழ்க்க சதிநடைபெறுவதாக காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி குற்றம் சுமத்தியுள்ளார்.
எம்மிடம் மந்திரக்கோல் ஏதும் இல்லை. குறித்த நேரத்திற்குள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் என்ன நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI) ஆதரவு தெரிவித்துள்ளன. ராம் தேவ் ஒரு சந்நியாசியா இல்லையா என்பது முக்கியமில்லை. இது அவரது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இந்தியாவின் அனைத்து தொழிலாளர்களினதும் பிரச்சினை என பாராளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய தேசிய யூனியன் காங்கிரஸ் செயலாளருமான குருதாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக